சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 5 பேர் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ விடுப்பில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.பத்மநாபன் நெமிலிக்கும், அங்கு பணியாற்றி வந்த எம்.சாந்தி அரக்கோணத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
     அதேபோல, அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.நாகராஜன் மாவட்ட ஊரக வளர்ச்சிப் பிரிவு அலுவலக மேலாளராகவும், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் வி.ஜெயஸ்ரீ பேர்ணாம்பட்டுக்கும், அங்கிருந்த ஏ.வி.சுப்பிரமணியன் வாலாஜாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai