சுடச்சுட

  

  வேலூர் விஐடி பல்கலை.யில் தேசிய அளவிலான உயிரி தொழில்நுட்ப மாநாட்டை பெங்களூரு பயோகான் நிறுவன ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் நரேந்திர செர்முலே செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
  விஐடி பல்கலைக்கழக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் உதவியுடன் ஆண்டுதோறும் உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உயிரி தொழில்நுட்ப 6-வது தேசிய மாநாடு நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு விஐடி சென்னை வளாக இணை துணைவேந்தர் பி.குணசேகரன் தலைமை வகித்தார். உயிரி அறிவியல் தொழில் நுட்பப் பள்ளி முதல்வர் கே.எம்.கோதண்டம் வரவேற்றார்.
   பெங்களூரூ பயோகான் நிறுவன ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவுத் தலைவர் நரேந்திர செர்முலே மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மத்திய உயிரி தொழில் நுட்பத் துறை சிறப்புப் பணித் தலைவர் தபன் சக்ரவர்த்தி, சென்னை எச்எல்எல் நிறுவன இயக்குநர் ராமன் கே.ராமச்சந்திரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
   விஐடியில் பயோடெக் பயின்று நாடு முழுவதிலும் உள்ள முன்னணி பயோடெக் நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் 16 பேருக்கு சிறப்பு விருதுகளை இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் வழங்கினார்.
   உயிரி தொழில்நுட்பப் பிரிவில் புதிய ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 6 பயோடெக் நிறுவனங்களுடன் விஐடி பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.
   இதில், நாடு முழுவதிலும் பல்கலை., கல்லூரிகளில் இருந்து 1,300-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai