Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    ஜோலார்பேட்டை அருகே எழில் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (45). இவர் புதுப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாடப்பள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் வேலைக்குச் சென்றனர். மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ஓர் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
     இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai