சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 23 எரிசாராய  கேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    வாணியம்பாடியை அடுத்த வேப்பமரத்து சாலை பகுதியில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் போலீஸார் வேப்பமரத்து சாலைப் பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள சிமென்ட் கூரை வேயப்பட்ட வீட்டின் அருகே எரிசாராய வாசனை வீசியுள்ளது.
    இதையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் திறந்து பார்த்தனர். அப்போது அறையில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 23 வெள்ளை நிற கேன்களில் இருந்த 800 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில், எரிசாராயம் பதுக்கப்பட்டிருந்த வீடு சிவலிங்கம் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
    இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தவர்களை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai