சுடச்சுட

  

  ஸ்மார்ட் சிட்டி: வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை

  By DIN  |   Published on : 19th October 2016 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையடுத்து, அதற்கான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்
  கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
  நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் இடங்கள், சி.எம்.சி மருத்துவமனையிலிருந்து கோட்டை வரை பறக்கும் சாலை அமைப்பது, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட வேண்டிய மேம்பாலங்கள், வேலூரைச் சுற்றி சுற்று வட்டச் சாலை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  பாலாற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பது, சதுப்பேரியைப் பலப்படுத்துவதுடன் ஆக்கிரமிப்புகள், கருவேல மரங்களை அகற்றுவது, நவீன மயமாக்கப்பட்ட கட்டடங்கள் கட்டுவது, கோட்டை அகழியை சுத்தம் செய்வதுடன், ஒளிரும் மின்விளக்குகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
  வனத் துறை சார்பில் மலைப் பகுதிகளை பசுமையாக வைத்துக் கொள்ளும் வகையில் சாலையோரங்களில் மரங்கள் அமைப்பது, அனைத்துப் பகுதிகளில் மின்சார கேபிள்களை பூமிக்கடியில் அமைப்பது, அனைத்துப் பகுதிகளில் மின் கம்பங்களை ஒரே சீரான உயரத்தில் இருக்கும் வகையில் மறு சீரமைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் குறுகிய சாலைகளை அகலப்படுத்துதல், பேருந்து வழித் தட பலகைகள் வைப்பது, பேருந்து நிழற் குடைகள், அனைத்துப் பேருந்து நிறுத்துமிடங்களில் ஜிபிஆர்எஸ் வசதி ஏற்படுத்தித் தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  அனைத்து வார்டுகளில் தகவல் மையங்களை அமைப்பது, கோட்டை சுற்றுச் சாலை அமைப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புதிய பேருந்து நிலையம் உருவாக்குதல், பயன்பாட்டில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை நேதாஜி காய்கறி மையமாக மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  மாநகராட்சி ஆணையர் த.குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், அரசு போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் தசரதன், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai