சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 21  மதுக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படுமென முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கை வெளியிட்டார்.
  இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக 500 மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதில் மாவட்டத்துக்கு உள்பட்ட வேலூர் கோட்டத்தில் உள்ள 168 டாஸ்மாக் மதுக் கடைகளில் 8, அரக்கோணத்தில் உள்ள 96-இல் 4 மதுக் கடைகள் மூடப்பட்டன.
  அதேபோல, மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள், தேசிய நெடுஞ்சாலை அருகில் மதுக் கடைகள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக வேலூரில் 13, அரக்கோணத்தில் 8 கடைகளை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகின்றன.
  குறிப்பிட்ட ரக மதுபானங்களுக்கு தட்டுப்பாடு: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 10-க்கும் அதிகமான மதுபானத் தயாரிப்பு ஆலைகளில் இருந்து விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
   இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு மதுபான ஆலை தயாரிப்பான மெக்டொவல், ஹனிபீ பிராந்தி வகைகள், ராயல் சேலஞ்ச், சிக்னேச்சர் விஸ்கி ரகம், கிங்பிஷர் பீர் வகைகள் விநியோகம் கடந்த 20 நாள்களாக மாநிலம் முழுவதிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
   இதுகுறித்து வேலூர் கோட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள கடைகளை வேறு பகுதிக்கு மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   குறிப்பிட்ட ஆலை தயாரிப்பு மதுபானங்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பது உண்மை தான். இது தொடர்பாக டாஸ்மாக் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆலை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் தீபாவளி பண்டிகைக்கு முன் சீராக வாய்ப்புள்ளது
  என்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai