சுடச்சுட

  

  அரக்கோணத்தில் புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க திட்டம் : எம்எல்ஏ சு.ரவி தகவல்

  By DIN  |   Published on : 21st October 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.
   அரக்கோணம் நகரின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு கடந்த 2014-ஆம் ஆண்டு   புதை சாக்கடை திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ரூ. 95.51 கோடிக்கு மதிப்பிடப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு தொழில்நுட்ப அனுமதி 2014 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. இந்நகராட்சி 36 வார்டுகளை உள்ளடக்கியுள்ள நிலையில் 2011-இன் மக்கள் தொகை 79,029  என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் உச்சகட்ட வருடங்கள் 2029 மற்றும் 2044 எனவும், அப்போதைய மக்கள் தொகை முறையே 95,100, 1,08,500 எனவும் கணக்கிடப்பட்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
   புதைச் சாக்கடை திட்டத்துக்காக மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
   தற்போது சுத்திகரிப்பு நிலையத்தில் 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணியில் 52.66 சதவீதமும், ஆள்நுழைகுழிகள் 76.70 சதவீதமும்,  வீட்டிணைப்புகள் 31.17 சதவீதமும், கழிவு நீரேற்று குழாய்கள் அமைக்கும் பணியில் 11.21 சதவீதமும் முடிவடைந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட தொகையில் தற்போது ரூ. 31.02 கோடி செலவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.   
   இதுகுறித்து பணி நடைபெறும் இடங்களில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்திய அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கூறுகையில், பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
  நகருக்கு ஒரு நல்லது நடக்கும்போது அதனால் ஏற்படும் சில சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். இத்திட்டம் நிறைவேறும் காலத்தில் நகரம் புதுப்பொலிவை பெறும்
  என்றார்.
   நகர்மன்றத் தலைவர் எஸ்.கண்ணதாசன், நகராட்சி ஆணையர் த.செளந்தரராஜன், மேலாளர் கோபிநாத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய புதைசாக்கடைத் திட்ட நிர்வாகப் பொறியாளர் ஏ.எம்.எஸ்.மணி, உதவிப் பொறியாளர் பிரபாகரன், இளநிலைப் பொறியாளர்கள் முதமதுஇலியாஸ், சுபவாணிசெளமதி, ஷாலினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai