சுடச்சுட

    

    ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: கடும் வெயிலில், கால்கடுக்க காத்திருக்கும் பொதுமக்கள்!

    By DIN  |   Published on : 21st October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிக்காக வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்திலும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையம் இயங்கி வந்தது. கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலும், நகர்புறத்தைச் சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்திலும் இயங்கும் மையத்துக்குச் சென்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
    அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் தேவைப்படுவதால் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தற்போது குடும்ப அட்டைகளுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதனால் பலர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கச் செல்கின்றனர்.
    இந்நிலையில் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வந்த மையம் நிர்வாகக் காரணங்களுக்காக கடந்த சில நாள்களாக இயங்கவில்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மட்டுமே புகைப்படம் எடுக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.
    கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. மந்தகதியில் பணிகள் நடக்கின்றன. அதனால் மக்கள் கால் கடுக்க நின்று செல்கின்றனர். எனவே இ-சேவை மைய கட்டடத்துக்கு முன்பாக நிழல் கூரையும், அமர்வதற்கு கூடுதலாக இருக்கைகளையும் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai