சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (55) ஆட்டோர் ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி சின்னத்தம்பி (60). இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு காவேரிப்பட்டிணத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் வாணியாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே தேசியநெடுஞ்சாலையில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அன்சர்பாஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னத்தம்பி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
    மற்றொரு விபத்து: நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (49). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்திக்கு சொந்தமான டிராக்டரை பழுது பார்க்க நாட்டறம்பள்ளி நோக்கி வியாழக்கிழமை ஓட்டிச் சென்றார்.
    பங்களாமேடு அருகே வந்தபோது, ஒசூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின் பக்கம் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai