சுடச்சுட

    

    கணவர், 2 மகன்கள் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி மனு

    By DIN  |   Published on : 21st October 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் தற்கொலைக்கு காரணமான 4 பேரை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தார்.
    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
    நான், எனது கணவர் வீரராகவன் (40), மகன்கள் தினேஷ்குமார் (10), விக்னேஷ் (7) ஆகியோருடன் புளியங்கண்ணு கிராமத்தில் வசித்து வந்தேன். இந்நிலையில் என் கணவர் வியாபாரத்துக்காக புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள மண்டியம்மன் நிதி நிறுவனத்தில் பணம் வாங்கியிருந்தார். வாங்கிய பணத்தை சிறுக, சிறுக கட்டி வந்தார். வியாபாரம் சரியில்லாததால் அவரால் பணம் கட்ட முடியவில்லை.
    இதனால் நிதி நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் 5 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை தரக்குறைவாக பேசி மிரட்டிவிட்டுச் சென்றனர். இதனால் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்தோம். இதில் நான் மட்டும் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவர் வீரராகவன், மகன்கள் தினேஷ்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் இறந்துவிட்டனர்.
    இதற்குக் காரணமான நிதிநிறுவன கந்து வட்டி நபர்கள் 5 பேர்களில் ஒருவரான ஞானவேல் என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். மற்ற நால்வரான ரவி, மனோகர், ஜெயசங்கர், மோகன் ஆகியோரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை.
    மேற்படி 4 நபர்களும் தற்போது புளியங்கண்ணுவில் ரவி என்பவருக்குச் சொந்தமான சூளையில் பதுங்கியுள்ளதாக தகவல்
    வருகிறது.
    அவர்களை சிப்காட் போலீஸார் கைது செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். எனவே 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
    மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் முருகேசன் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai