சுடச்சுட

    

    கோயில் குள படிக்கட்டுகளை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 21st October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் கவுரி தீர்த்தக்குள படிக்கட்டுகளை சீரமைக்க வலியுறுத்தி கோயில் நுழைவு வாயில் முன்பு இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலத்தில் நீவா நதி எனும் பொன்னை ஆற்றின் கரையோரம் நால்வரால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த கோயிலான தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
    இக்கோயில் நுழைவு வாயிலில் உள்ள கவுரி தீர்த்தக்குளத்தில் கற்களால் ஆன படிக்கட்டுகளின் ஒரு பகுதி கடந்த 4 மாதங்களுக்கு முன் சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
    இதனால் பக்தர்கள் சிலர் தாமாக முன்வந்து படிக்கட்டுகளை சீரமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர்கள் ரவி, பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் திருவலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வில்வநாதீஸ்வரர் கோயில் நுழைவுவாயில் முன்பு வியாழக்கிழமை வந்தனர். அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்தும், சரிந்து விழுந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்க வலியறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai