தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
By DIN | Published on : 21st October 2016 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை இந்தியா மற்றும் பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியக் குழு உதவியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை அலுவலர் ஐ.செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பி.எம்.ஆதில் அஹமத் தலைமை வகித்து வழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் நகரின் பல தெருக்களின் வழியாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். வேலூர் 10-ஆவது பட்டாலியன் ராணுவ அதிகாரி சுபேதார் ராகேஷ் சிங், பேர்ணாம்பட்டு நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி டி.பஷீருத்தின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. உடற்கல்வி இயக்குநர் எஸ்.திவான் மக்தூம் நன்றி கூறினார்.