சுடச்சுட

    

    "பல்வேறு தொழில்களுக்கு ரசாயனப் பொறியியலின் பங்கு அவசியம்'

    By DIN  |   Published on : 21st October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரசாயனப்
    பொறியியல் முக்கியப் பங்கு வகிக்கிறது என இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில்நுட்ப மைய இயக்குநர் அனந்தராம கிருஷ்ணன் பேசினார்.
    விஐடி பல்கலை.யில் ரசாயனப் பொறியியல் துறை சார்பில் டெக்னோஸ்கேப்-16 எனும் ரசாயனம், உயிர் ரசாயனம், பெட்ரோலியம் மற்றும் சுற்றுச்சூழல் பகுப்பு தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.  கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்பாளர் மகேஷ் கணேசபிள்ளை விளக்கினார். விஐடி கட்டுமானம், ரசாயன பொறியியல் பள்ளி முதல்வர் எஸ்.கே.சேகர் வரவேற்றார்.
    இதில், தஞ்சையில் உள்ள இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில்நுட்ப மைய இயக்குநர் அனந்தராம கிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசியதாவது:
    உணவுப் பயிர் பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல், பெட்ரோலியம், உணவு எண்ணெய், உயிர் மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ரசாயன பொறியியலின் பங்கு முக்கியமானதாகும். நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் ரசாயன தொழில்களின் பங்கு 8 முதல் 9 சதவிகிதமாகவும், உணவுத் தொழிலில் 12 முதல் 14 சதவிகிதமாகவும் உள்ளது.
    மத்திய ஆசிய நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளம் மிகுந்து காணப்பட்டாலும், குடிநீருக்காக அவர்கள் நமது நாட்டை எதிர் நோக்கியுள்ளனர். குடிநீர் பாட்டில்கள் பாலிகெமிக்கல் மூலம் உருவாக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி மூலம் மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
    பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரசாயனப் பொறியியலின் பங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளதால் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். இளம் ஆராய்ச்சியாளர்கள் அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
    சென்னை ஐஐடி கெளரவப் பேராசிரியர் கே.கிருஷ்ணைய்யாவுக்கு விஐடி பல்கலை. சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    ஜப்பான் நாட்டின் யோகாமா தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் காசோந கமுரா, மலேசிய நாட்டின் செயின்ஸ் பல்கலைக
    கழகப் பேராசிரியர் ஜெயினல் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சர்வதேச அளவில் கெமிக்கல் நிறுவனங்களின் நிபுணர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் வேதியியல் பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் கலநது கொண்டனர். இணை அமைப்பாளர் அருணாசிங் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai