சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 21st October 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் பகுதியில் பள்ளி வேலை நேரம் முடியும் நேரத்தில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டுமென ஆம்பூர் கிராமப் பகுதி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     ஆம்பூர் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆம்பூர் மற்றும் ஆம்பூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு நகரப் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
     சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
     ஆம்பூர் - வாணியம்பாடி மார்க்கத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் தான் மாணவர்கள் ஆம்பூரில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த மார்க்கத்தில் குறைவான நகரப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதனால் மாலை நேரத்தில் பள்ளி வேலை நேரம் முடிந்து, மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
    அரசுப் பேருந்தில் நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பயணிகள் கூட்டத்தோடு சேர்ந்து மாணவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். பள்ளி வேலை நேரம் முடியும் மாலை நேரத்தில் ஆம்பூர் - வாணியம்பாடி மார்க்கத்தில் ஒரு நகரப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதனால் அந்த ஒரு பேருந்தில் கிராமங்களுக்குச் செல்லும் அனைத்து மாணவர்களும் பயணம் செய்ய முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
     அதேபோல காலையில் பள்ளிக்கு வருவதற்கும் போதிய பேருந்து வசதி இல்லை. அதனால் மாணவர்கள் பயணம் செய்யும் வகையில் கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
     வேலூர் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் துரித நடவடிக்கை எடுத்து  கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது  உடனடி எதிர்பார்ப்பு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai