சுடச்சுட

    

    பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.2. 58 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 21st October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காடு அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளரின் இருசக்கர வாகனப் பெட்டியிலிருந்த ரூ.2.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு வட்டம், ஆயிரம் மங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக இருந்து வருபவர் ஏழுமலை (58). இவர், சங்க உறுப்பினர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்வதற்காக திமிரியில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்றார்.
    பின்னர், ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்தை பெற்று, தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
    பின்னர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் தனது வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திமிரி  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai