சுடச்சுட

  

  பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு

  By DIN  |   Published on : 21st October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த  பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (47). இவர், நிம்மியம்பட்டில் உள்ள வங்கியில் அடமானம் வைத்துள்ள நகையை மீட்டு வர ரூ.40 ஆயிரம் பணத்துடன் புதன்கிழமை சென்றார்.  வாணியம்பாடியிலிருந்து காவலூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்தபோது சாந்தி வைத்திருந்த பையை பிளேடால் அறுத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்நிலையில், தனது பணம் திருடு போனதை அறிந்த சாந்தி, அதிர்ச்சியடைந்தார்.
  இதுகுறித்து அவர், ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai