சுடச்சுட

  

  "ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்'

  By DIN  |   Published on : 21st October 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை ரயில்வே போலீஸார் வியாழக்கிழமை விநியோகம் செய்தனர்.
   எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் ரயில்களில் பயணிப்போர் பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை காட்பாடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.  ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், பயணிகளிடம் பட்டாசுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும், மீறி எடுத்துச் சென்றால் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
  இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கூறியதாவது:  ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பட்டாசு எடுத்துச் செல்வதைக் கண்காணிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  மறைமுகமாக பட்டாசு எடுத்துச் செல்லப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும் என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai