சுடச்சுட

  

  அக்ராவரம் - மலைமேடு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 22nd October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராணிப்பேட்டையை அடுத்த அக்ராவரம் - மலைமேடு அருகே குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்  சாலையில் குடிநீர் ஓடி வீணாகின்றது.
  இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   வாலாஜா ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட மலைமேடு குடியிருப்பையொட்டி, அக்கராவரம் - மலைமேடு சாலை செல்கிறது. இச்சாலையையொட்டி, திருவலம் பொன்னை ஆற்று உறை கிணற்றில் இருந்து மலைமேடு, எடப்பாளையம், வானாபாடி, செட்டித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சத குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  மேலும் மலைமேடு பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் இணைப்பு என இரு குழாய்கள் செல்கின்றன.
   இந்நிலையில் மலைமேடு குடியிருப்பையொட்டி செல்லும் தார் சாலையோரம் மேற்கண்ட குடிநீர் குழாய் இணைப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடி குடிநீர் வீணாகி வருகிறது.
  மேலும் உடைப்பு காரணமாக வெளியேறிவரும் அதிகப்படியான தண்ணீர் தார்ச் சாலையை சேதமடையச் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், உடைப்பு ஏற்பட்ட குழாய் இணைப்பை உடனடியாக சரிசெய்து வீணாகி வரும் குடிநீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai