சுடச்சுட

  

  அரக்கோணம் நகராட்சியில் தற்போது நடைபெற்றுவரும் புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நகரில் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஏ.எம்.எஸ்.மணி
  தெரிவித்தார்.
   அரக்கோணம் நகராட்சியில் தற்போது புதை சாக்கடை திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக தற்போது காந்தி சாலையில் ஆங்காங்கே ஆள்நுழை குழிகள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், நடந்து செல்வோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கடைகள் வைத்திருப்போர் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டனர்.
  இந்நிலையில் இப்பிரச்னை குறித்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியின் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.  
  கூட்ட முடிவில் புதைசாக்கடை பணிகளை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் முடிக்கவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
  மேலும் அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நகராட்சி மீன் மார்க்கெட் முதல் அரக்கோணம் நகராட்சி அலுவலகம் வரை காந்தி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த ஏழு நாள்களில் இச்சாலையில் அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆள்நுழைகுழிகளையும், வீட்டிணைப்புகளையும் முடித்து விட திட்டமிடப்பட்டுள்ளது.
  திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் எம்.ஆர்.எப் ஆலை வழியாக குருவராஜபேட்டை, சாலை, கைனூர் மேம்பாலம் வழியாகவும், திருவள்ளூரில் இருந்து வரும் வாகனங்கள் ஓடியன்மணி ரவுண்டானாவில் இருந்து ரயில் நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, சோளிங்கர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இச்சாலையில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல ஏதுவாக ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ள உயரத் தடுப்புக் கம்பங்களை அகற்ற ரயில்வே நிர்வாகத்துக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  இப்பணிகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்டப்பணிகள் நடைபெறும்.  இவ்வாறு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai