Enable Javscript for better performance
இளைஞர் அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    அணைக்கட்டு அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

    அணைக்கட்டு அருகே அல்லேரி மலை ஜடையன்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் வினோத் குமார் (28). இவர் அல்லேரி கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. அதே நேரத்தில் துக்க நிகழ்ச்சிக்கும் அவர் செல்லவில்லையாம். இந்நிலையில் அவரது சடலம் அல்லேரிமலை காட்டுப் பகுதியில் கிடப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    தலையில் கல் வீசி அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. புகாரின்பேரில், ஆம்பூர் டிஎஸ்பி பிலிப் கென்னடி தலைமையில் அணைக்கட்டு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
    பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai