சுடச்சுட

  

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   அம்முண்டியில் செயல்பட்டுவரும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
  மாவட்டச் செயலாளர் பி.சக்திவேல் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது, கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ரூ. 22 கோடியும், லாபத்தில் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பங்குத்தொகை ரூ. 1.50 கோடியும் சேர்த்து வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும்.
  இந்தத் தொகையை வழங்க கால தாமதமானால் வரும் 25-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கரும்பு உற்பத்தி விவசாயிகள் ஒன்று திரண்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தெரிவித்தார்.
   இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட கரும்பு உற்பத்தி விவசாயிகள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai