சுடச்சுட

  

  கல்லூரி முதல்வருக்கு மிரட்டல்: நடவடிக்கை கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

  By DIN  |   Published on : 22nd October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  வேலூர் ஊரீசுக் கல்லூரி வளாகத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்களை தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி உணவகத்துக்குள் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினர்.
  இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில், சேதமடைந்த பொருள்களுக்கு உரிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டதை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
  இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (அக்.19) கல்லூரிக்குச் சென்ற உணவக உரிமையாளர்கள், உணவகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனதை மீட்டுத் தரக் கேட்டதோடு, முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
  முதல்வருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  இதற்கிடையில், மிரட்டல் விடுத்த உணவக உரிமையாளர்கள் ரமேஷ் ஆனந்தராஜ், அருள்ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai