சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே கார்-வேன் மோதிக் கொண்ட விபத்தில் காரில் வந்த 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
    வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கலீம் (40). இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு கலீம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 11 பேர் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து வாணியம்பாடிக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரை கலீம் ஓட்டி வந்தார். இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி அருகே வந்தபோது, வளைவில் இருந்து திடீரென ஒரு வேன் திரும்பியது.
    அப்போது, காரும், வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 5 குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அருகிலிருந்தவர்கள், ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அம்பலூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai