சுடச்சுட

    

    பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீர வணக்க  நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு டிஐஜி தமிழ்ச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் முன்னிலை வகித்தனர். பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உமாசங்கர், பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், காவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, படைத்தள சீனியர் கமாண்டர் பெண் அலுவலர் ஆர்.நம்பியார் தலைமை வகித்து நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கடைத்தள துணை கமாண்டர்கள், உதவி கமாண்டர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக படைவீரர்களின் அணிவகுப்பை சீனியர் கமாண்டர் ஆர்.நம்பியார் ஏற்றுக்கொண்டார்.
    குடியாத்தத்தில்...
    திரிபுரா மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஆர்.அலெக்சாண்டர், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதையடுத்து, அவர் படித்த குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் வீரவணக்க நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    குடியாத்தத்தை அடுத்த கொத்தகுப்பத்தைச் சேர்ந்த ராமன் - பெரியகுழந்தை தம்பதியின் மகன் அலெக்சாண்டர். இவர் 21 ஆண்டுகளுக்கு முன் திரிபுரா மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
     நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி கே.எம்.சங்கரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ஜி.புருஷோத்தமன் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், அலெக்சாண்டரின் மகன் ஏ.சதீஷ்குமார் ஆகியோர் நினைவஞ்சலி உரை நிகழ்த்தினர்.
    உதவித் தலைமையாசிரியர்கள் எஸ்.கலைவாணி, எஸ்.நேதாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai