சுடச்சுட

    

    குரங்குகள் கொண்டு வருவதைத் தடுக்க வாகனச் சோதனை: ஆட்சியர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 22nd October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூருக்கு குரங்குகள் கொண்டு வந்து விடப்படுவதைத் தடுக்க வாகனச் சோதனையை தீவிரப்படுத்துமாறு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தினார்.
    வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், வேளாண் இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
     ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி ஏற்றி வேலூருக்கு வரும் வாகனங்களில் குரங்குகளை மறைத்து எடுத்து வந்து விட்டுச் செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் பத்திரப்பள்ளி சோதனைச் சாவடியில் வனத் துறையினர் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்குவதுடன், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் அளிக்கக் கோரி விண்ணப்பித்தும் வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உடனடியாக வழங்க வேண்டும்.
    பாரதப் பிரதமரின் தனிநபர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து விவசாயிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.
    இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியது: கடந்தாண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டில் ரூ.400 கோடிக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தகுதியான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
     ஆந்திர மாநிலத்திலிருந்து வாகனங்களில் குரங்குகள் கொண்டு வரப்பட்டு வேலூரில் விடப்படுவதைத் தடுக்க பத்திரப்பள்ளி சோதனைச் சாவடியில் வனத் துறை கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
     தொடர்ந்து, வேளாண்துறை சார்பில் விவசாயிகள் 7 பேருக்கு ரூ. 7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் சுழல் கலப்பை, பட்டு வளர்ச்சித் துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தில் 18 பேருக்கு மானியத் தொகையாக ரூ. 10 லட்சத்து 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai