Enable Javscript for better performance
சீரான குடிநீர் விநியோகம் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சீரான குடிநீர் விநியோகம் கோரி கிருஷ்ணாபுரம் புது காலனியைச் சேர்ந்த பெண்கள் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம் அருகே திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ளது கிருஷ்ணாபுரம். இந்த ஊராட்சியைச் சேர்ந்த புதுகாலனியில் கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த பல மாதங்களாகவே இக்கிராமப் பெண்கள் வெளிக் கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து இக்
    கிராமப் பெண்கள், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கிராமத்துக்கு நேரில் வந்து சீரான குடிநீர் விநியோகத்துக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai