சுடச்சுட

    

    தண்டவாள பராமரிப்புப் பணியின் போது விபத்து: ஊழியர் காயம்

    By DIN  |   Published on : 22nd October 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி ரயில் நிலையத்தில் டிராக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கியபோது, வெடித்ததில் சிதறிய சூடான எண்ணெய் பட்டதில் ஊழியர் பலத்த காயம் அடைந்தார்.  
     வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள் கொட்டும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு டிராக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் 10-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக் இயந்திரத்தில் உள்ள ஒரு பாகம் பழுதடைந்தது. இதையடுத்து அரக்கோணம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ஊழியர் தேவேந்திரன் (45), பழுதான பாகத்தை நடைமேடையில் வைத்து நெருப்பு வைத்து சூடேற்றினார். அப்போது பழுதான பாகம் வெடித்துச் சிதறியதில், அதிலிருந்த சூடான எண்ணெய் தேவேந்திரனின் உடலில் பட்டது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த சக ஊழியர்கள் தேவேந்திரனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் காயங்கள் அதிகமாக இருந்ததால் அவரை சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கப்பட்டார்.
     தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப் பதிந்தனர். விபத்து குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai