சுடச்சுட

    

    நிரந்தர மருத்துவர் கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 22nd October 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுகாதார நிலையத்தின் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம், கிருபில்ஸ்பேட்டை, செய்யூர் பாட்டை தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
    அரக்கோணம் வட்டாரத் தலைமை சுகாதார நிலையமான முதூர் அரசினர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுழற்சி முறையில் மருத்துவர்கள் இங்கு பணிக்கு அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.
    மேலும் இந்த மருத்துவர்களே டெங்கு காய்ச்சல் பரிசோதனை நடவடிக்கை பணியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய அனுப்பப்படுகின்றனர்.
    இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு செவிலியரே மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளதாகவும் தெரிகிறது.
    இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கருணாமூர்த்தி, நகர நிர்வாகி அலாவூதீன் மற்றும் அப்பகுதி மகளிர் உள்ளிட்ட பலர் அரக்கோணம் நகர ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai