சுடச்சுட

    

    மலைக் கிராம சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்களுடன் எம்எல்ஏ சாலை மறியல்

    By DIN  |   Published on : 22nd October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலைக் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை  சீரமைக்கக் கோரி பொதுமக்களுடன் திருப்பத்தூர் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டார்.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு உள்பட்ட ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள மலைக் கிராமம் புதூர்நாடு. இங்கிருந்து நெல்லிவாசல் நாடு இடையே 15 கி.மீ. தொலைவுக்கு வனத் துறையினரால் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகவே தார்ச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர். இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    இதையடுத்து நெல்லிவாசல் பகுதி மக்கள் திருப்பத்தூர் சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று எம்எல்ஏ நல்லதம்பியிடம் புகார் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ நல்லதம்பி  (திமுக) புகார் அளித்தவர்களுடன் சென்றார். பின்னர் நெல்லிவாசல் அருகே வனத் துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து நெல்லிவாசல் சென்ற அரசுப் பேருந்தை சிறைப்பிடித்தனர்.  தகவலறிந்த சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai