Enable Javscript for better performance
வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 22nd October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு அருகே வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருடு போனது.
     பேர்ணாம்பட்டை அடுத்த கார்கூர் ஊராட்சி மன்றச் செயலர் ஸ்ரீராம் (44). இவர் மசிகம் ஊராட்சி மன்றச் செயலர் பிரபாகரனுக்கு, மாத சீட்டு கட்டிய வகையில் ரூ. 1.19 லட்சம் தர வேண்டுமாம். அந்த பணத்தை தன் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஸ்ரீராம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை பணம் செலுத்தச் சென்றுள்ளார்.
    பணத்தை இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, வங்கிச் சலானை பூர்த்தி செய்து கொண்டிருந்துள்ளார்.  பின்னர் வந்து பார்த்தபோது, வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது.  இதுகுறித்து பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.
    போலீஸார் வந்து வங்கியின் கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தின் பெட்டியைத் திறந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai