சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டச் செயலர் சி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.சாமிநாதன், பி.காத்தவராயன், பி.குணசேகரன், சி.சரவணன், ஐ.கார்த்திகேயன், எஸ்.கோட்டிஸ்வரன், சண்முகம், எம்.பி.ரவிகுமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் 5 மாதங்களாக தொழிலாளர்களுக்கு கூலி வழங்காமல் உள்ளதைக் கண்டிப்பது, உடனடியாக அனைத்துத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலித் தொகையை வழங்க வேண்டுவது என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    வாலாஜாபேட்டையில்...
    வாலாஜாபேட்டை, அக். 21: இதே கோரிக்கையை வலியுறுத்தி வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் எ.ரேணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் துரைபழனி, எல்.சி.மணி, நிலவு குப்புசாமி, என்.ரமேஷ், ஆர்.காளப்பன், பத்மாமணி, அம்சம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai