Enable Javscript for better performance
வேலூர் மாவட்டத்தில் 69 கடைகளுக்கு பட்டாசு விற்க அனுமதி: மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் 69 கடைகளுக்கு பட்டாசு விற்க அனுமதி: மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்

    By DIN  |   Published on : 22nd October 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் 69 கடைகளுக்கு பட்டாசு விற்க தடையில்லை எனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் செ.முருகேசன் தெரிவித்தார்.
     அரக்கோணம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தீயணைப்பு அலுவலர் மற்றும் வீரர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணியை ஆய்வு செய்ய வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செ.முருகேசன் அரக்கோணத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். கட்டுமானப் பணியைப் பார்வையிட்ட பின் நிலைய கோப்புகளையும் ஆய்வு செய்த செ.முருகேசன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     வேலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்க தடையில்லை சான்றிதழ் கோரி விண்ணப்பித்த 70 கடைகளில் 69 கடைகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் விண்ணப்பங்கள் வந்துகொண்டே இருக்கிறது. தடையில்லா சான்றிதழ் வழங்கும் முன் தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளதா, தீ ஏற்படாத சூழ்நிலை உள்ளதா, பாதுகாப்பாக வெளியேற வழிகள் உள்ளதா உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்றார். நிலைய தீயணைப்பு அலுவலர் சேகர் உடன் இருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai