சுடச்சுட

    

    அரசுப் பேருந்து மோதியதில் இருவர் சாவு: பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 23rd October 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிகொண்டா அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    பள்ளிகொண்டா அருகே கொல்லமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (25), இவரது நண்பர் லத்தேரி அருகே பணமடங்கி மாலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (30). இருவரும் வேலூரிலிருந்து மாதனூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் அகரம்சேரி எஸ்.என்.பாளையம் பகுதியில் சாலையைக் கடந்து திரும்பவும் வேலூர் நோக்கிச் செல்ல முயன்றனர்.
    அப்போது தருமபுரியிலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.
    அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த அகரம்சேரி, எஸ்.என்.பாளையம், கொல்லமங்களம் கிராம மக்கள் அங்கு திரண்டனர். அகரம்சேரி எஸ்.என்.பாளையம் கிராம தேசிய நெடுஞ்சாலை வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த அபாயகரமான வளவை சரிசெய்ய வேண்டும்.
    அவ்விடத்தில் இருளைப் போக்க விளக்கு அமைக்க வேண்டுமென நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்தனர்.
    தகவல் அறிந்த வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன், ஆம்பூர் டிஎஸ்பி பிலிப் கென்னடி மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பின்னர் இறந்தவர்களின் சடலங்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai