சுடச்சுட

  

  உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே பட்டாசு இருப்பு வைக்க அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 23rd October 2016 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தினார்.
  பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு தயாரிப்பு உரிமம் பெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
  அனுமதிக்கப்பட்ட அளவில் பட்டாசுகளை உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். அவசர வழி ஏற்படுத்தி இருப்பதோடு, எளிதில் தீப்பற்றாத இடத்தில் தான் குடோன்களை அமைக்க வேண்டும். பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக் கூடாது. விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட பட்டாசுக் கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் தாணுலிங்கம், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் முருகேசன், வருவாய்த் துறை அலுவலர்கள், பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai