Enable Javscript for better performance
ஏரி மண் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஏரி மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
    நெமிலி வட்டம்,  ஆலப்பாக்கம் பகுதியில் அனுமதியின்றி ஏரிமண் கடத்தப்படுவதாக வட்டாட்சியர் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் கோபி, கிராமநிர்வாக அலுவலர்கள் சவுந்திரராஜன், முரளிதரன், ராமு உள்ளிட்டோர் ஆலப்பாக்கத்தில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை இரவு  ஈடுபட்டனர்.
    அப்போது அவ்வழியாக ஏரி மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
    இதையடுத்து, அந்த லாரியை வருவாய்த் துறையினர் பறி
    முதல் செய்து காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    இதே போன்று வாலாஜாபேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகம் பகுதியில் வட்டாட்சியர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஏரி மண் ஏற்றி வந்த லாரியை மடக்கினர். விசாரணையில் மண் எடுத்து செல்ல எந்தவிதமான உரிமமும் இல்லை என தெரியவந்தது.
    இதையடுத்து வருவாய்த் துறையினர் ஏரி மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai