Enable Javscript for better performance
கடிதம் எழுதும் போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கடிதம் எழுதும் போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

    By DIN  |   Published on : 23rd October 2016 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
    இந்தியாவின் பன்முகத்தன்மையே நமது பலம் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும் போட்டி அஞ்சல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 217 மாணவர்கள் கலந்து கொண்டு கடிதம் எழுதினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை அலுவலர் கதிர் அகமது, ஊழியர்கள் செய்திருந்தனர்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர், அக். 23:  இந்திய அஞ்சல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி ஆம்பூர் ஜலாலியா நிதியுதவி துவக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இதில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 56 மாணவர்கள் பங்கேற்றனர்.
    ஆம்பூர் அஞ்சல் நிலைய அலுவலர் வ.வெங்கட்ராமன், எழுத்தர் ருக்குநாதன், தலைமை ஆசிரியர்கள் அத்திக்கூர் ரஹ்மான், ரவிச்சந்திரன், வில்பிரட் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மாணவர்களின் கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்படுகிறது.  தேர்ந்தெடுக்கப்படும் கடிதங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai