சுடச்சுட

    

    வாணியம்பாடியில் செம்மரம் வெட்டச் சென்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு நியூ டவுன் புறவழிச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாக ஒரு காரும், காருக்குப் பின்னால் இருவரும் நிற்பதைப் பார்த்து அருகில் சென்றனர். அப்போது போலீஸாரைக் கண்டதும், நின்றிருந்த காரை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று தலைமறைவாயினர்.
    அதையடுத்து அங்கு நின்றிருந்த இருவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களைப் பிடித்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் மரம் வெட்ட பயன்படுத்தும் 5 கோடாரிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், இருவரையும் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி(23), மணி (28) என்பது தெரியவந்தது. மேலும், ஆந்திர மாநிலத்துக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்திச் செல்வதற்காக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    மேலும் காரில் தப்பிச் சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai