Enable Javscript for better performance
டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை: மத்திய அரசு ஏற்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை: மத்திய அரசு ஏற்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 23rd October 2016 11:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக இருப்பதால் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.விஜய கோவிந்தராஜன், பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது: அக்டோபர் மாதத்தில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதற்கு வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வு முக்கியக் காரணமாக இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பப் பெற்று ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே விலை உயர்வு இருக்க வேண்டும்.
    மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் கிலோ மீட்டருக்கு 42 காசு தான் வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவது ஏற்புடையதல்ல என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai