சுடச்சுட

    

    தச்சம்பட்டரை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 23rd October 2016 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தச்சம்பட்டறை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தது தச்சம்பட்டறைக் கிராமம். இங்கு 850- க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். ஆலப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
    இப்பகுதி மக்கள் அத்தியாவசிய ரேஷன் பொருள்களான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றை வாங்க வேண்டுமானால் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.  இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.
    எனவே தச்சம்பட்டறை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai