சுடச்சுட

    

    திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்: சுற்றுலா பயணிகள் உயிர்தப்பினர்

    By DIN  |   Published on : 23rd October 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏலகிரிமலைக்கு சுற்றுலா வந்த வேன் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் 6 பேர் உயிர் தப்பினர்.
    சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறை என்பதால் ராஜேஷ், அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஆறு பேர் வாணியம்பாடி அருகே உள்ள ஏலகிரிமலைக்கு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை மயிலாடுதுறையைச் சேர்ந்த யுவராஜ் (38) ஓட்டிவந்தார்.
    இந்நிலையில், ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது வேனின் என்ஜினில் இருந்து திடீரென புகைவரத் தொடங்கியது. இதை கண்ட ஓட்டுநர் யுவராஜ் உடனடியாக வேனை நிறுத்தி அனைவரையும் கீழே இறங்குமாறு சப்தமிட்டார்.
    இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் அவசர அவசரமாக வேனை விட்டு இறங்கினர். இருப்பினும் அவர்கள் கொண்டு வந்த உடைகள், 4 செல்லிடப்பேசிகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை வேனுடன் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். ஆனாலும், வேன் முற்றிலும் எரிந்து கருகியது. இதுகுறித்து ஏலகிரிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai