சுடச்சுட

  

  திருவலம் சிவன் கோயில் குளப் படிக்கட்டுகள் ரூ. 6.20 லட்சம் செலவில் சீரமைக்க ஏற்பாடு

  By DIN  |   Published on : 23rd October 2016 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் வளாகத்தில் சரிந்து விழுந்த கௌரி தீர்த்தக்குள படிக்கட்டுகளை ரூ. 6.20 லட்சம் செலவில் சீரமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  காட்பாடி வட்டம், திருவலத்தில் அமைந்துள்ள தனுமத்யாம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள கௌரி தீர்த்தக்குள படிக்கட்டுகளின் ஒரு பகுதி சில மாதங்களுக்கு முன் சரிந்து விழுந்தது. அதன் பின்னர் அதற்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பக்தர்கள் சிலர் தாமாக முன்வந்து படிக்கட்டுகளை சீரமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.
  தகவல் அறிந்த இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர்கள் ரவி, பிரவீண்குமார் ஆகியோர் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் கோயில் வாயில் முன் அண்மையில் கூடினர். அப்போது, சரிந்து விழுந்த படிக்கட்டுகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோயில் செயல் அலுவலர் நிர்மலா தலைமையில் கோயில் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதன்பேரில் அவர்களும் கலந்துகொண்டனர்.  
  இதில், சரிந்து விழுந்த படிக்கட்டுகளை சீரமைக்க ரூ. 6.20 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சிவாஜியிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai