சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே காட்டு விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை குரும்பேரி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவரை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பதும், இவர் ஜவ்வாதுமலை வனப் பகுதிகளில் மான், உடும்பு, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாடி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
    வழக்கம்போல் வேட்டையாட வந்தபோதுதான் போலீஸாரிடம் அவர் சிக்கினார். இதையடுத்து கோவிந்தராஜை கைதுசெய்த போலீஸார், அனுமதியின்றி அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர், கோவிந்தராஜை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai