சுடச்சுட

    

    ஜோலார்பேட்டை அருகே கூலித் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(43). கூலி தொழிலாளியான இவரது மனைவி லட்சுமி. இவர்கள் வெளியூரில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த கழுத்து செயின், கம்மல் உள்ளிட்ட 10 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ஒரு லட்ச ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி
    வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai