Enable Javscript for better performance
நகை பறிப்பு வழக்குகளில் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் பகுதியில் நகை பறிப்பு வழக்குகளில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    குடியாத்தம், சுற்றுப் பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு புகார்கள் தொடர்பாக நகர குற்றப் பிரிவு போலீஸார், வழக்குகள் பதிந்து விசாரணை நடத்திவந்தனர்.  
    இந்நிலையில் மேற்கண்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் கவின்குமார் (21), பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டைச் சேர்ந்த சின்னதுரை (40) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகை, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai