Enable Javscript for better performance
நாகஜோதி அம்மன்கோயிலுக்கு பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பேருந்து நிறுத்தம் அருகே சுயம்புவாக புற்று வடிவில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் நாகஜோதி அம்மன் கோயில் பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இதையொட்டி, சிப்காட் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், எம்பிடி சாலை வழியாக நாகஜோதி அம்மன் கோயிலை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
     பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai