சுடச்சுட

    

    நூறுநாள் வேலை திட்டப் பணி அட்டைகள் பறிமுதல் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

    By DIN  |   Published on : 23rd October 2016 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதித் திட்டத்துக்கான தங்களது பணி அட்டைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பறிமுதல் செய்ததைக் கண்டித்து பெருங்களத்தூர் கிராம மகளிர் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணத்தை அடுத்து திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள ஊராட்சி பெருங்களத்தூர். இக்கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் மகளிர் அனைவரையும் ஆதார் அட்டை பெற்றுவரும்படி, இத்திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பலமுறை அறிவுறுத்தியும் இக்கிராம மகளிர் ஆதார் அட்டை பெறவில்லை எனத் தெரிகிறது. இதனால் இக்கிராம மகளிருக்கு அளிக்க வேண்டிய பணித்தொகை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இக்கிராமத்தில் ஆதார் அட்டை பெறாத மகளிரின் பணி அட்டைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.
    இதனைத் தொடர்ந்து பணி அட்டைகளை பறிமுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்த பெருங்களத்தூர் கிராம மகளிர், வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து அவர்களிடம் பேசிய ஒன்றிய ஆணையர் சடையப்பன், விரைவில் ஆதார் அட்டைகளைப் பெற்று வரும்படி எச்சரித்து பணி அட்டைகளை திருப்பி அளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai