Enable Javscript for better performance
படிப்புடன் பண்பு, ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்: சக்தி அம்மா- Dinamani

சுடச்சுட

    

    படிப்புடன் பண்பு, ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்: சக்தி அம்மா

    By DIN  |   Published on : 23rd October 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களுக்கு படிப்புடன், பண்பு, ஒழுக்கத்தை யும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என ஸ்ரீபுரம் பொற்கோயில் சக்தி அம்மா தெரிவித்தார்.
    தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளிக்கு விருது, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு விருது என முப்பெரும் விழா ஸ்ரீபுரம் நாராயாணி வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் பொற்கோயில் சக்தி அம்மா அருளாசி வழங்கிப் பேசியதாவது:
    மனித வாழ்க்கை பலவகையான அனுபவம் கொண்டதாகும். ஆசிரியர் பணிக்கு ஈடானது எதுவுமில்லை என்பதால் தான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பெரும் பகுதியை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர். தாயை விட குழந்தைக்கு பெரிய பாதுகாவலர் எவரும் இருக்க முடியாது. இருப்பினும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து குழந்தைகளை அனுப்புவதால் அந்த நம்பிக்கையைக் காக்க வேண்டும்.
    படிப்பு மட்டுமல்லாது, வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை கற்பிப்பவர் தான் ஆசிரியர். சேவை செய்யும் போது மாணவர்களுக்காக செய்யவில்லை, நாட்டுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியரிடம் வர வேண்டும். படிப்புடன் பண்பு, ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்றார்.
    விழாவுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.சி.பிள்ளை, நாராயணி வித்யாலயா பள்ளித் தாளாளர் எம்.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் கே.தெய்வசிகாமணி வரவேற்றார்.
    சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    சிறந்த ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், பாதுகாப்பு குழுத் தலைவர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் டி.ஜெ.நரேந்திரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai