Enable Javscript for better performance
பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் பன்னிரு தமிழ் வேதப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     ஆம்பூர் பிரியா மஹாலில் அதிகாலை 5 மணிக்கு இடபக்கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இவ்விழா, இரவு 7 மணி வரை நடைபெற்றது.
    இதில், ஆம்பூர் தேவார சபையினரால் ஐம்பெரும் புராணப் பாடல்கள் பாடப்பட்டன. "பன்னிரு தமிழ் வேதங்கள்' எனும் தலைப்பில் ஆ. பக்தவச்சலம், "பதிகப் பெருவழி' எனும் தலைப்பில் புரிசை நடராஜன்,  "நாவரசரின் நல்லுரை' எனும் தலைப்பில் ராமமூர்த்தி, "அம்மையாரின் அற்புதத்திரு அந்தாதி' எனும் தலைப்பில் ச. செங்கல்வராயன் ஆகியோர் பேசினர். ஆம்பூர் சிவனடியார் கூட்டம், பள்ளித்தெரு பன்னிரு தமிழ் வேத வளர்ச்சி மன்றத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai