சுடச்சுட

  

  அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தாத்தா பாட்டி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாத்தா பாட்டி நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார்.
  இதில் மாணவ, மாணவிகளின் தாத்தா, பாட்டிகள், அரக்கோணம் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், பள்ளி ஆசிரியர்கள் வசந்தி, ஜெயஸ்ரீ, பிரபாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் தாத்தா பாட்டிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai