Enable Javscript for better performance
பாஜக செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் குடியாத்தத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன் தலைமை வகித்தார். குடியாத்தம் நகர தலைவர் பி.ஸ்ரீகாந்த் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாபாஸ்பாபு, பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொதுச் செயலர்கள் வாசுதேவன், ஈஸ்வர், எஸ்.தோன்றல்நாயகன், மாவட்டச் செயலர் சிவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    குடியாத்தம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை ஒன்று அமைக்க வேண்டும். ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும்பொருட்டு, பெரும்பாலான ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேரோடு அகற்ற தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai